திருவண்ணாமலை மாவட்டம் வள்ளிவாகை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் மணிகண்டன் தனது குடும்பத்துடன், 'பழங்குடியினர் காட்டுநாயக்கன்' சாதி சான்றிதழ் வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவர்கள் 2014ஆம் ஆண்டு முதல் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்துவருகின்றனர். ஆனால் இது சம்பந்தமாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறப்பட்டும் தொடர்ந்து அக்குடும்பத்தை அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தி. மலையில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி குடும்பத்தினர் தர்ணா! - ஜாதி சான்றிதழ்காக குடும்பத்தினர் தர்ணா
திருவண்ணாமலை: சாதி சான்றிதழ் வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் ஐந்து பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிகண்டனுடைய சொந்த அத்தைக்கு சாதி சான்றிதழ் 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டு இருக்கிறது, அதன் அடிப்படையில் மணிகண்டன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதைக் கண்டித்து மணிகண்டன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து விசாரணை செய்த வட்டாட்சியர் அமுலு, சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி அனுப்பிவைத்தார்.