தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடிமருந்து குடோன்களின் பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி எஸ்.பி., ஆய்வு - Thoothukudi SP visited and inspected the ammunition godowns

தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே அரசின் அனுமதியுடன் இயங்கிவரும் வெடிமருந்து குடோன்களின் பாதுகாப்பு விடயங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வெடிமருந்து குடோன்களை நேரில் சென்று காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் !
வெடிமருந்து குடோன்களை நேரில் சென்று காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் !

By

Published : Aug 14, 2020, 8:12 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். அவருக்கு சொந்தமான வெடிமருந்து குடோன் ஒன்று சில்லாநத்தம் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் உள்ளது. அந்த வெடிமருந்து குடோனுக்கு தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட் 14) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு 250 கிலோ ஜெலட்டின் குச்சிகளும், ஆயிரத்து 673 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும் இருந்தன. அதன் உரிமையாளரான பெருமாளிடம் இது குறித்து கேட்டறிந்து, அவருக்கு தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார். அதேபோல், மேலத்தட்டப்பாறை பகுதியில் உள்ள இரண்டு வெடிமருந்து குடோன்களையும் எஸ்.பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், புதியம்புத்தூர் துணை ஆய்வாளர் முத்துராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details