திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்! - நாம் தமிழர் கட்சி
திருவாரூர் : சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு உள்ளிட்ட மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை கண்டித்து நன்னிலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
இந்த ஆர்ப்பாட்டத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு EIA 2020, தேசிய மீன்வள கொள்கை, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திருத்தம், புதிய தேசிய கல்விக் கொள்கை, இட ஒதுக்கீடு கொள்கை ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களை திரும்பப் பெற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.