தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு! - projects are inspected by the District Monitoring Officer

திருப்பூர் : பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோபால் நேரில் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு!
வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு!

By

Published : Nov 7, 2020, 9:02 PM IST

திருப்பூர் மாவட்டத்தின் மங்கலம் சாலை, ராயபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலருமான கோபால் நேரில் பார்வையிட்டார்.

அப்போது, அங்கிருந்த பொதுப்பணி துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details