அதிமுக தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத் திறப்பு விழா இன்று (செப்டம்பர் 4) நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு பூக்கள் போட்டு மரியாதை செலுத்தி, குத்துவிளக்கு ஏற்றினார். அதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான கணிப்பொறியை தொடங்கி வைத்தார்.