தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மணத்திடல் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் சுதாகர் (46). இவர் தனது இருசக்கர வாகனத்தை நடுக்காவேரி பேருந்து நிலையம் அருகில் நிறுத்தியுள்ளார்.
அப்பகுதியில் தனது வேலைகளை முடித்துவிட்டு பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் காணவில்லை. இது சம்மந்தமாக நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதேபோல் பள்ளியக்ரஹாரத்தைச் சேர்ந்த சின்னமணி பிள்ளை மகன் சுகுமார் (59) என்பவர் தனது இருசக்கர வாகனம் மணக்கரம்பை கடைவீதியில் நிறுத்தியிருந்ததைக் காணவில்லை என்று நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.