தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம்! - DMK M.P Tamizhachi thangapandian Criticise ADMK

சென்னை : கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவ படிப்புகளில் இடங்களை ஒதுக்குவதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள மத்திய அரசுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம்!
மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம்!

By

Published : Oct 19, 2020, 10:14 PM IST

கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சிறப்பு உயர் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்துள்ள விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர்.

அந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினித் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது.

கடந்த செப்.1 ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதி விசாரணையின் போது, கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இருப்பினும், இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், "அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்காக சிறப்பு மருத்துவ படிப்புகளில் இடங்களை ஒதுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பளித்துள்ள போதிலும், அதற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த முடிவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். உடனடியாக, தமிழ்நாடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய பாஜக அரசானது, மாநில அதிகாரங்களை அபகரித்து வருகிறது. மாநில அரசின் அதிகாரத்தையும் சுயாட்சியையும் மீட்டெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details