தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் ! - Tasmac employees will besiege the House of Governors

நாமக்கல் : டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்படும் என பொதுத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் !
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் !

By

Published : Oct 2, 2020, 7:58 PM IST

நாமக்கல் மாவட்ட அரசு டாஸ்மாக் எஸ்.சி, எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் சரஸ்ராம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் சரஸ்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய சரஸ்ராம், " பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணி மூப்பு, கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், டாஸ்மாக் கடைகளில் கழிப்பிடம், ஓய்வறை வசதி செய்து தர வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன டாஸ்மாக் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

மேலும், “அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் விரைவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்" எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details