கிராம ஊராட்சிகளின் சாலை வசதியை மேம்படுத்தும் விதமாக கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மேற்கொள்ளப்படும் இப்பணியில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.
ஊராட்சிகளுக்கான திட்டம் என்பதால் புறநகரில் நடக்கும் சாலைப்பணியை மாவட்ட அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், சாலைகள் குறிப்பிட்டப்படி அமைக்கப்படாமல் பெயருக்கு அமைக்கப்பட்டு பெரிய அளவில் முறைகேடு நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டி பஞ்சாயத்தில் இருந்து மம்சாபுரம் கண்மாய்க்கரை வரை 5 கிலோ மீட்டர் தூரம் ரூ.15 லட்சம் மதிப்பில் 10 நாள்களுக்கு முன்னதாக அமைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.