தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளியன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டலை வெளியிட்டது  மாசு கட்டுப்பாட்டு வாரியம்! - Pollution Control Measures

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிகள் வெடிப்பதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த நெறிமுறை வழிகாட்டலை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளியன்று பின்பற்ற வேண்டியவை குறித்த வழிகாட்டலை வெளியிட்ட  மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
தீபாவளியன்று பின்பற்ற வேண்டியவை குறித்த வழிகாட்டலை வெளியிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

By

Published : Nov 7, 2020, 2:10 PM IST

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் தாக்கத்திற்கு மத்தியில் தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால் பல்வேறு மாநில அரசுகள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையன்று பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த வழிகாட்டலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இன்று (நவ.7) வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டலில், "இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், இயற்கையைப் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதால் பொதுமக்கள் குறைந்த ஒளியுடனும், குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மற்றும் அமைதிகாக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details