கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் 16ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், கோவிட்-19 பரவல் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் தற்போதைய சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை விரைந்து நடத்தி முடிக்க உயர் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி பொறியியல் பாடப்பிரிவுகள், தொழில்நுட்ப படிப்புகள், கலை மற்றும் அறிவியல் பாடங்களை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளை மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.