தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவி ஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு! - Tamilnadu government welcomes volunteers to test for Covid-19 vaccine

சென்னை : கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பிற்காக பரிசோதனை செய்யப்பட உள்ள கோவிஷூல்ட் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தன்னார்வலர்களுக்குத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி பரிசோதனைக்கு பங்கேற்க தன்னார்வலர்களை வரவேற்கும் அரசு!
கோவிட்-19 தடுப்பூசி பரிசோதனைக்கு பங்கேற்க தன்னார்வலர்களை வரவேற்கும் அரசு!

By

Published : Oct 1, 2020, 12:59 AM IST

தமிழ்நாட்டின் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷுல்ட் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு விரும்பும் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் முன் வரலாம் என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கோவிட்-19 தடுப்பு மருந்தை மனிதர்கள் மேல் சோதனை செய்ய இருக்கிறோம்.

இதற்கு சிரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணை ஸ்பான்சராக உள்ளன.

இந்தத் தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்பது முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலானது.

18 வயதிற்கு மேலானவராக இருந்து இந்தப் பரிசோதனையில் பங்கேற்க ஆர்வம் கொண்டவராக இருந்தால் செயல் திட்ட ஒருங்கிணைப்பாளரை 7806845198 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் covidvaccinetraildph@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி பதிவு செய்துக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details