தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துரோகம் செய்கிறார் முதலமைச்சர் - ஸ்டாலின் தாக்கு - Edappadi palaniswami

சென்னை : 7.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெறாமல் முதலமைச்சர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துரோகம் செய்கிறார் முதலமைச்சர் !
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துரோகம் செய்கிறார் முதலமைச்சர் !

By

Published : Oct 19, 2020, 2:00 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (அக்.19) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அது குறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதலமைச்சர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளில், "தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், மத்திய பாஜக அரசு" ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது.

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்ட முன்வரைவிற்கு உடனடியாக தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details