தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய சாலை மறியல் - சிபிஐ (எம்) அறிவிப்பு - New farm laws

பெரம்பலூர் : மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையைக் கண்டித்து நவ.26ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிபிஐ (எம்) முன்னாள் எம்.எல்.ஏ லாசர் அறிவித்துள்ளார்.

மத்திய அரசைக் கண்டித்து நவ.26ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் !
மத்திய அரசைக் கண்டித்து நவ.26ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் !

By

Published : Nov 21, 2020, 3:53 PM IST

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள சிபிஐ(எம்) மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு பேரவை கூட்டம் இன்று (நவம்பர் 21) நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ லாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசை கண்டித்து வருகிற 26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும். பேரிடர் காலத்தில் மத்திய அரசு மக்களை கைவிட்டுவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெறுப்புணர்வுடன் செயல்படுகிறார். மாநில அரசு தங்களை பாதுகாத்துக் கொள்ள, ஆட்சியைத் தொடர, பணம் சம்பாதிக்க மத்திய அரசு சொல்வதைக் கண்களை மூடிக்கொண்டு செயல்படுகிறது" என்றார். இ

ABOUT THE AUTHOR

...view details