தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது' - முதலமைச்சர் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு

சென்னை : சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

பெண்களுக்கும் சொத்துரிமை உண்டென்ற தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது!
பெண்களுக்கும் சொத்துரிமை உண்டென்ற தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது!

By

Published : Aug 11, 2020, 4:16 PM IST

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், "சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது" என கூறியுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என சட்டம் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், 2005ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் உரிமையை அளிக்கக் கூடாதென கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

அந்த வழக்குகள் மீதான ஒருங்கிணைந்த இறுதி விசாரணை இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றபோது, "திருத்தப்பட்ட வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், பெண்ணிய செயல்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details