தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த திமுக நிர்வாகியின் உருவப்படத்தை திறந்துவைத்த ஸ்டாலின்! - Mayiladurai News

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மறைந்த திமுக துணைச் செயலாளர் தம்பி டி. சத்தியேந்திரன் திருவுருவப் படத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

மறைந்த திமுக நிர்வாகியின் உருவப் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!
மறைந்த திமுக நிர்வாகியின் உருவப் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

By

Published : Nov 19, 2020, 4:37 PM IST

மயிலாடுதுறை நகர மன்ற முன்னாள் துணை தலைவரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான தம்பி டி. சத்தியேந்திரன் மாரடைப்புக் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார்.

மறைந்த அவரது திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி வழியே தம்பி டி. சத்தியேந்திரனின் படத்தை திறந்துவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வணக்கம் செலுத்தினார்.

இதையடுத்து பேசிய மு.க. ஸ்டாலின், "மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளர் தம்பி டி. சத்தியேந்திரன் நம்மை விட்டுப் பிரிந்து இருந்தாலும், அவர் ஆற்றிய பணிகள் இப்போதும் ஏன், எப்போதும் நம் கண் முன் வந்து நிழலாடிக் கொண்டிருக்கும்" எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மயிலாடுதுறை அருட்செல்வன், பன்னீர்செல்வம், அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறைந்த சத்தியேந்திரன், திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தேவேந்திரனின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details