தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழுவர் விடுதலை விவகாரத்தில் காங். கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆர்.எஸ். பாரதி - Seven Tamil release

சென்னை : காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள காரணத்திற்காக 7 தமிழர் விடுதலைத் தொடர்பான அவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை : காங்கிரஸ் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆர்.எஸ்.பாரதி
எழுவர் விடுதலை : காங்கிரஸ் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆர்.எஸ்.பாரதி

By

Published : Nov 7, 2020, 5:12 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

கரூரில் திமுகவிற்கு வாக்களிக்கும் 200 வாக்களர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

முகவர் முன்னிலையில்தான் பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு, அந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அது கடைப்பிடிக்கப்படவில்லை.

அத்துடன் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள 10 ஆயிரம் பேரை கரூர் தொகுதியில் சேர்க்க முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி துணைபோயுள்ளார்.

இந்த ஆதாரங்களை எல்லம் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளோம்.

7 பேரை விடுதலை செய்யக்கூடாது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது. ஏழு தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற திமுகவின் கருத்தை வலியுறுத்தியுள்ளோம். அரசியல் கூட்டணி வேறு, கருத்துகள்.

காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதைத் தெரிந்துதான் 7 பேர் விடுதலையை வலியுறுத்தியுள்ளோம். கூட்டணியில் உள்ள காரணத்திற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details