தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ வீரரின் தியாகத்தை போற்றும் 'செக்யூரிட்டி' குறும்படம் - பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு - "Security" short film praising the sacrifice of a soldier

சென்னை : இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறும் வகையில் எடுக்கப்பட செக்யூரிட்டி என்ற குறும்படத்தை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டியுள்ளார்.

ராணுவ வீரரின் தியாகத்தை போற்றும் "செக்யூரிட்டி" குறும்படம் - பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ !
ராணுவ வீரரின் தியாகத்தை போற்றும் "செக்யூரிட்டி" குறும்படம் - பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ !

By

Published : Sep 8, 2020, 10:30 PM IST

திருநெல்வேலி, ரா ரா, தலைவா, உத்தரவு மகாராஜா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் உதயா. இவர் செக்யூரிட்டி என்ற குறும்படத்தை இயக்கி, முதியவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த குறும்படம் 7ஆம் தேதி அன்று இணையத்தில் வெளியிடப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தை பார்த்த தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து நடிகர் உதயா கூறுகையில், "நான் முதல் முறையாக இயக்கி, நடித்த செக்யூரிட்டி குறும்படம் இணையதளத்தில் நேற்று (செப்டம்பர் 7) வெளியிடப்பட்டது. அந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.

இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக எடுத்துள்ள இந்த குறும்படத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு படத்தைப் பார்த்து என்னையும், படக் குழுவினரையும், பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் முதல் முயற்சிக்கு, ஊக்கம் கொடுக்கும் வகையில் பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details