பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வீற்றிருப்பவர் எஸ்பிபி. அரை நூற்றாண்டு காலமாக தமிழ் நெஞ்சங்களில் தமிழ் செவிகளில் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த குரல்.
உடல் மறைந்தாலும் எஸ்பிபியின் இசை மறையாது - மதுரை ஆதீனம் இரங்கல் - SPB's music does not disappear even if the body disappears
மதுரை : தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் மறைந்தாலும், அவரது இசை ஒருபோதும் மறையாது என்று மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
![உடல் மறைந்தாலும் எஸ்பிபியின் இசை மறையாது - மதுரை ஆதீனம் இரங்கல் உடல் மறைந்தாலும் எஸ்பிபியின் இசை மறையாது - மதுரை ஆதீனம் இரங்கல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:51:42:1601054502-tn-mdu-05-spb-aadheenam-condolences-script-7208110-25092020223116-2509f-1601053276-257.jpg)
உடல் மறைந்தாலும் எஸ்பிபியின் இசை மறையாது - மதுரை ஆதீனம் இரங்கல்
பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடி இசை விரும்பிகளின் உள்ளம் கவர் கள்வனாகத் திகழ்ந்தவர்.
அவர் உடல் மறைந்தாலும் அவரது இசை ஒருபோதும் மறையாது, அவரை இழந்து தவிக்கின்ற அவருடைய குடும்பத்தினருக்கும் கோடானகோடி ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.