மயிலாடுதுறை :தரங்கம்பாடியில் ரூ. 38.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பல்வேறு கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறையில் ரூ.38 லட்சம் மதிப்பிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது! - பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ்
தரங்கம்பாடியில் ரூ.38.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பல்வேறு கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ரூ.38.12 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பூமிபூஜை நடைபெற்றது. பாலூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான ரூபாய் 15 லட்சத்து 47 ஆயிரம் செலவில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 2 வகுப்பறை கட்டடங்களுக்கும், காலமநல்லூர் ஊராட்சியில் 22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டார். இதில் அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.