ராமநாதபுரத்தில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நிதி நிறுவனம் தொடர்பாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் சக்கரவர்த்தி உயர் நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"ராமநாதபுரத்தில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்திவந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாகத் தெரிவித்தனர்.
இதை நம்பி 19.9.2019ஆம் தேதி அன்று ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு உடன்படிக்கை பத்திரம், தேதி குறிப்பிடாமல் ஒரு கோடி மதிப்புள்ள காசோலைகள் தந்தனர். ஒரு ஆண்டுக்கு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்தனர்.
இதனிடையே, நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர், மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் மோசடி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைதுசெய்தனர்.