தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2020, 9:04 PM IST

Updated : Aug 31, 2020, 9:10 PM IST

ETV Bharat / state

ரூ. 12,500 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்!

சென்னை: தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.12,500 கோடி ஜிஎஸ்டி தொகையை உடனடியாக தரவேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ரூ 12500 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்!
ரூ 12500 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்!

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குஎழுதியுள்ள கடிதத்தில்," சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தியதில் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.

இருப்பினும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய இழப்பீட்டுத் தொகை 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

கரோனா நெருக்கடிச் சூழலில் மக்கள் நல்வாழ்வு கட்டமைப்பை மேம்படுத்தவும், நிவாரணப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ரூ.7000 கோடி செலவாகியுள்ளதால், தற்போது பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

மாநிலங்களுக்கு இழப்பீடாக தரவேண்டிய தொகையை மத்திய அரசே ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Last Updated : Aug 31, 2020, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details