தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்கு வழி சாலைக்கு நிலமளித்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி சாலை மறியல் - திமுக அறிவிப்பு ! - நான்கு வழி சாலைக்கு நிலமளித்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி சாலை மறியல்

கன்னியாகுமரி: நான்கு வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களின் உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி 11ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக குமரி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் அறிவித்துள்ளார்.

நான்கு வழி சாலைக்கு நிலமளித்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி சாலை மறியல் - திமுக அறிவிப்பு !
நான்கு வழி சாலைக்கு நிலமளித்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி சாலை மறியல் - திமுக அறிவிப்பு !

By

Published : Nov 9, 2020, 3:25 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் புதூர் - தேவசகாயம் மவுண்ட் சந்திப்பில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அங்கு நான்கு வழிச்சாலை அமைக்க கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை ஏராளமான விவசாயிகளும் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் 10 ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலைத்துறை காலம் தாழ்த்தி வருகிறது. அவர்களுக்கு உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

அதேபோல, குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், ஈசாந்திமங்கலம், நாவல் காடு போன்ற பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றிற்கும் மண் எடுக்க அரசு தடை விதித்துள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, செங்கல் சூளைக்கு பட்டா நிலத்தில் இருந்து மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆரல்வாய்மொழி பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்" என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details