சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்.18) நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டது.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு இளநிலை பட்டப்படிப்பில், கன்னியாகுமரியைச் சேர்ந்த விஷ்ணு மாயா என்ற பெண் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அதேபோல உணவு தொழில்நுட்பம் கோழியின தொழில்நுட்பம் மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பில் தருமபுரியைச் சேர்ந்த சிவா என்ற பெண் முதலிடம் பிடித்துள்ளார்.