2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகளும், திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்று 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக இன்பதுரை அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.