5 ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு - கே.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட ஐந்து செயலாளர்கள் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு
சென்னை: கே.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட ஐந்து செயலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது, விபு நாயர் (தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேலாண் இயக்குநர்-டான்சி), கே.பணீந்திர ரெட்டி (வருவாய் நிர்வாக ஆணையர்), எம்.சாய்குமார் (முதலமைச்சரின செயலர்), பி.சிவசங்கரன் (நகர்ப்புற உச்சவரம்பு மற்றும் நிலவரி), டி.எஸ்.ஜவஹர் (போக்குவரத்து துறை ஆணையர்) ஆகிய ஐந்து ஐஏஎஸ் அலுவலர்களுக்கும் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு இணையான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.