தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட்களுக்கு விற்கும் முனைப்பில் மோடி அரசு செயல்படுகிறது" - க.பொன்முடி - DMK Vs BJP

விழுப்புரம் : நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காமல் ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட்களுக்கு விற்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறதென திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட்களுக்கு விற்கும் முனைப்பில் பிரதமர் மோடி இருக்கிறது!
ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட்களுக்கு விற்கும் முனைப்பில் பிரதமர் மோடி இருக்கிறது!

By

Published : Sep 22, 2020, 6:40 PM IST

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ம.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "நான் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆனாலும், எப்பொழுதும் விழுப்புரம் மாவட்டத்துக்கும், இந்த மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன்.

தற்போதுள்ள மத்திய பாஜக அரசு நாட்டினை கூறுபோட்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்பதில் முனைப்பாக செயல்படுகிறது. கூடிய விரைவில் நாட்டின் அதிபர் நான் தான் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நா.புகழேந்தி, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details