தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : ஜெயராமன் தொடுத்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு! - Pollachi cases

சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தன்னை இணைத்து பேசியதற்காக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலினை பதிலளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : ஜெயராமன் தொடுத்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : ஜெயராமன் தொடுத்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!

By

Published : Aug 4, 2020, 4:34 PM IST

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொலி எடுத்து மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படுகிறது. மு.க. ஸ்டாலினின் இந்த பேச்சு கலைஞர் தொலைக்காட்சியிலும், நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்படுத்தி உண்மைக்குப் புறம்பான தகவலை மக்களிடம் மு.க. ஸ்டாலின் பேசிவருவதால், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமெனவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை இணைத்து ஊடகங்களில் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி.சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, இவர்களும் இந்த பிரச்சினை பற்றி பேசவும் எழுதவும் தடை விதிக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்னிலையில் இன்று(ஆக.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்மனுதார்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்தது. அப்போது எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினார். இதனையடுத்து, வழக்கு குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் வரும் 13 ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details