சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 6ஆவது மண்டலமான திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள செல்லப்பா தெருவில் தந்தை பெரியார் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் பெயர் பலகை மற்றும் நுழைவாயிலை மறைக்கும் வகையில் அதன் அருகே பயன்பாட்டில் இல்லாத பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது.
அந்தப் பேருந்து நிறுத்தத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்து-வருகின்றனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் வசந்த குமாரிடம் பேசியபோது, "கடந்த 3 ஆண்டுகளாக அந்த வழித்தடத்தில் எந்தப் பேருந்தும் இயக்கப்படுவதில்லை. பயன்பாட்டில் இல்லாத பேருந்து நிலையம் தந்தை பெரியார் மருத்துவமனை பலகை, நுழைவுவாயிலை மறைத்துக்கொள்கிறது.
இதனால் மருத்துவமனைக்கு வரும் பலர் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி, மண்டல அலுவலர்களுக்குப் பலமுறை புகார் கடிதங்கள் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.