சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தன் மனைவி பெயரில் மருத்துவ ஆய்வகத்தை நடத்திவருகிறார். தொழிலை விரிவுபடுத்துவதற்காக பஞ்சாப் வங்கியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து சுமார் 22 லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மகன் தனியாக தொழில் வைத்து தொடங்குவதற்காக சுமார் 85 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது.
அப்போது ஜஸ்ட் டைல் என்ற அழைப்பு மூலம் வினோ ஆனந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் ராஜ்குமார் தன்னுடைய தேவைகளை பற்றி கூறியிருக்கிறார். இதனால் தனக்கு தெரிந்த அரசு வங்கியில் சுமார் 85 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாக ஆனந்த் கூறியுள்ளார்.
அதற்காக ராஜ்குமார் அவருடைய ஆவணங்களின் விவரங்களை வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேட்டபோது சுமார் 85 லட்ச ரூபாய் தருவதாக வங்கியிலிருந்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சொத்து ஆவணங்கள் அனைத்தும் 22 லட்ச ரூபாய் கடனில் பஞ்சாப் வங்கியில் இருப்பதால் அதை பணம் கட்டி மீட்க வேண்டியிருந்தது.
எனவே ராஜ்குமாரிடம் அவ்வளவு பணம் இல்லாததால் வினோ ஆனந்த் மூலம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவரும் ராஜா என்பவரை அணுகி, அவரிடம் சுமார் இரண்டரை லட்ச ரூபாய் வட்டிக்கு 22 லட்ச ரூபாய் கடன் பெற்றார். 15 நாட்களுக்குள் 2 லட்ச ரூபாயை வட்டியுடன் பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்பது ராஜாவின் நிபந்தனை. இதனிடையே 22 லட்ச ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தி அந்த ஆவணத்தை பெற்ற ராஜ்குமார், ராஜாவிடம் கொடுத்துள்ளார்.