தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பதற்றம் தணிக்க காவல்துறையினர் குவிப்பு ! - Occupancies in Velankanni removed by Public works department

நாகை : வேளாங்கண்ணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை நாகை மாவட்ட நிர்வாகம் அகற்றினர்.

வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பதற்றம் தணிக்க காவல்துறையினர் குவிப்பு !
வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பதற்றம் தணிக்க காவல்துறையினர் குவிப்பு !

By

Published : Nov 7, 2020, 12:27 PM IST

நாகை மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான புனித வேளாங்கண்ணி மாதா பேராலயம் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி மாநிலம் பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

வேளாங்கண்ணியின் பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளுக்கு மாறாகவும், மக்களுக்கு இடையூறாகவும் கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

இதனையடுத்து, இன்று (நவ.7) வேளாங்கண்ணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நாகை கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையிலான பொதுப் பணித்துறையினர் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகளை நான்கு ஜே.சி.பி வாகனங்கள் மூலம் இடித்து அகற்றினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாகை காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details