தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனாம்பேட்டையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது!

சென்னை : தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

தேனாம்பேட்டையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது!
தேனாம்பேட்டையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது!

By

Published : Nov 18, 2020, 3:36 PM IST

தமிழ்நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோயின் பரவலும், பாதிப்பும் கடந்த சில நாள்களாக குறைந்திருந்தது.

இந்த நிலையில், தற்போது சென்னை மண்டலத்தில் மீண்டும் அதன் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

குறிப்பாக தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற பகுதிகளில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறதென மாநகராட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவிட்-19 பாதிப்பிற்குள்ளானவர்கள் வசித்துவந்த குடியிருப்பு பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கரோனா வேகமாக பரவிவரும் கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் 50க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ முகாம்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

மண்டல வாரியான பாதிக்கப்பட்டவரின் பட்டியல் :-

அண்ணா நகர் - 23, 170 பேர்

கோடம்பாக்கம் - 22,645 பேர்

தேனாம்பேட்டை - 20,095 பேர்

ராயபுரம் - 18,707 பேர்

தண்டையார்பேட்டை - 16,346 பேர்

திரு.வி.க. நகர் - 16,624 பேர்

அடையாறு - 16,511 பேர்

அம்பத்தூர் - 14,817 பேர்

வளசரவாக்கம் - 13,271 பேர்

ஆலந்தூர் - 8,515 பேர்

மாதவரம் - 7,573 பேர்

பெருங்குடி - 7,658 பேர்

திருவொற்றியூர் - 6,411 பேர்

சோழிங்கநல்லூர் - 5,606 பேர்

மணலி - 3,321 பேர்

மே 8ஆம் தேதி முதல் இன்றுவரை ஏறத்தாழ 50 லட்சத்திற்கு மேற்பட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, சென்னையில் மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 646 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 லட்சத்து ஆயிரத்து 41 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள 4 ஆயிரத்து 822 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், 3 ஆயிரத்து 783 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details