தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழர் நாகரிகத் தொன்மையை அழிக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்'- பழ. நெடுமாறன் - தமிழர் தேசிய முன்னணி

சென்னை : தமிழரின் தொன்மை அடையாளமாகத் திகழும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி ஆழ் குழாய்க் கிணறுகளைத் தோண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் நாகரிகத் தொன்மையை அழிக்கும் முயற்சி அரசு நிறுத்த வேண்டும் !
தமிழர் நாகரிகத் தொன்மையை அழிக்கும் முயற்சி அரசு நிறுத்த வேண்டும் !

By

Published : Aug 29, 2020, 9:32 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத் தொன்மையை எடுத்துக்காட்டும் அரிய பொருள்களும் தமிழ் பிராமி கீறல்களைக் கொண்ட மட்பாண்டங்களும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் கிடைத்த அழகன் குளம் சங்க காலத்தில் சிறந்திருந்த வணிக நகரமாகும்.

எகிப்து, கிரேக்கம், ரோமாபுரி போன்ற நாடுகளுடன் தமிழர்கள் வாணிபம் நடத்தியதற்கானச் சான்றாதாரங்களும் இங்கு கிடைத்துள்ளன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இவ்வூரில் 1990 ஆம் ஆண்டு முதல் இங்கு அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைச் சுற்றிலும் உள்ள பல இடங்களிலும் அகழாய்வு நடைபெற உள்ளது.

தமிழரின் தொன்மை நாகரிகத்தின் அடையாளமாகத் திகழும் அத்தகைய அழகன் குளத்தின் அருகே இந்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக ஆழ் குழாய்க் கிணறுகளைத் தொண்டும் பணியினைத் தொடங்கியுள்ளது.

இதன் விளைவாக பழந்தமிழரின் தொல்லியல் சான்றுகள் அழியும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், இதையொட்டி அமைந்துள்ள கடற்கரை கிராமங்களில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details