தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், அனைத்து ஊராட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகதேவன்பாளையம் ஊராட்சியில் ஒன்பதாவது வார்டில் போட்டியிடும் 26 வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்குவதில் குளறுபடிகள் நடந்துள்ளன என்று அந்த வார்டு வேட்பாளர்கள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வேட்பாளர்கள் பெயர்களை காகிதத்தில் எழுதி குலுக்கல் முறையில் சின்னங்களை ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். தேர்தல் முறைப்படி சின்னங்களின் பெயரை காகிதத்தில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வேட்பாளர் பெயர் வரிசைப்படி சின்னங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர்.
வார்டு உறுப்பினர்களுக்கு சின்னம் ஒதுக்கியதில் குளறுபடி: வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதம் இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேட்பாளர்களை அழைத்துப்பேசி மீண்டும் ஒருமுறை சின்னங்களை குலுக்கலிட்டு பெயர் வரிசைப்படி ஒதுக்குவதாகக் கூறியதால் வேட்பாளர்கள் சமாதானம் அடைந்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது!