நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் தற்போது சம்பா நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பா பயிர்களை காக்க அரசு இறவை பாசன திட்டத்தில் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (அக்.,6) விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாசனத்திற்காக வழங்கப்படும் மின்சாரத்தின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.