மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பிரதான நெடுஞ்சாலையில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பணம் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் ரூ. 10 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். இன்டர்நெட் கோளாறு காரணமாக பணம் வராததால் வாடிக்கையாளர் சென்று விட்டார். நீண்ட நேரத்திற்கு பிறகு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வந்துள்ளது.
ஏடிஎம்மில் பணத்தை விட்டுச் சென்ற வாடிக்கையாளர் - காவல்துறை வேண்டுகோள் - Money confiscated
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே ஏடிஎம் இயந்திரத்திலே பணத்தை விட்டுச் சென்ற வாடிக்கையாளர் உரிய ஆதாரத்தை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து பணம் எடுக்க வந்த மற்றொரு வாடிக்கையாளர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர், பணத்தை கைப்பற்றி உரிய வங்கியில் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டனர். யார் பணம் என்று தெரியாமல் நாங்கள் வைத்துக் கொள்ள இயலாது என்று கூறி விட்டனர். பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலையத்தில் உரிய ஆவணங்களை காட்டி பாதிக்கப்பட்டவர் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.