தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம் திறப்பு! - Thiruvallur News

திருவள்ளூர் : இளைஞர்களின் தொழில்வாய்ப்புகளுக்கு உதவும் வகையில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையத்தை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்தார்.

திருவள்ளூரில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம் திறப்பு!
திருவள்ளூரில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம் திறப்பு!

By

Published : Oct 20, 2020, 8:27 PM IST

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில், மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையத்தினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் இது குறித்து ஊடகங்களிடையே பேசிய அவர், "திருவள்ளூர், சேலம், விழுப்புரம், விருதுநகர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் அமைத்திட மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 60 விழுக்காடு தொகை முதல் தவணையாக கட்டட மறுசீரமைப்பிற்காக ரூ.13 லட்சத்து 19 ஆயிரத்திற்கான பணிகள் பொதுப்பணித்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டது. மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கான தளவாடப் பொருள்கள் ரூ. 16 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் கணினிகள், தகவல் அறியும் மின்னணு தொடுதிரை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளன.

இம்மையம் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உயர் கல்வி பயில்வதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். அதேபோல, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இம்மையத்தில் உள்ள கணினி மூலம் தங்களுக்கு தேவையான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொண்டும், இணையதளம் வாயிலாக தேர்வுகளுக்கு விண்ணப்பித்தும் பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை வேலைவாய்ப்புகளைப் பெற இணையதளம் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம். தனியார் துறையில் பணி நியமனம் பெற, திறன் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் இம்மையத்தில் செயல்படுத்தப்படவுள்ளது" என கூறினார்.

இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு இணை இயக்குநர் (பொ) ஆ.அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் க.விஜயா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details