இந்தியா முழுவதும் அக்.2 ஆம் தேதி அன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடுப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றை நடத்தி, பரிசளித்து ஊக்குவிப்பது போன்ற நிகழ்வுகள் நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் காந்தி வாழ்க்கை வரலாறு புதிர் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் சார்பில் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே போட்டி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில் இந்தியில் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், தமிழ்நாடு அரசும் அதனை ஏற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அதையே அனுப்பியுள்ளது.
அதில்," காந்தி ஜெயந்தியையொட்டி பள்ளி மாணவர்களை ‘ஆன்-லைன்’ புதிர் போட்டியில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும். இந்த போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 1-ந்தேதி இரவு 12 மணி வரை நடக்கிறது. 3 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.