தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த ரகுமான்கானின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் ! - MK Stalin paying homage to late Raghuman khan

சென்னை : மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கான் திருவுருவப் படத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.

மறைத்த திமுக மூத்த தலைவர் இரகுமான்கானின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் !
மறைத்த திமுக மூத்த தலைவர் இரகுமான்கானின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் !

By

Published : Aug 29, 2020, 2:49 PM IST

அண்மையில் மறைந்த திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.ரகுமான்கானின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 29) காணொலி வாயிலாக நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திருவுருவப் படத் திறப்பு நிகழ்வில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு மற்றும் மறைந்த ரகுமான்கானின் குடும்பத்தார், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்விற்கு பின்னர், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான வசந்தகுமாரின் மறைவுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தீர்மானம் ஒன்று அதன்பிறகு நிறைவேற்றப்பட்டது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details