தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிய கோரிய மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அம்மனுவில், "2011ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார்.
ஏறத்தாழ ரூபாய் 7 கோடிக்கும் மேலாக முறைகேடான வழியில் சொத்து சேர்த்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிய வேண்டும்" எனக் கோரியிருந்தார்.