தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் நிலத்தில் தொழிற்சாலை கட்ட தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

பரம்பிக்குளம் ஆழியாறு நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் வரக்கூடிய வேளாண் நிலத்தில் தொழிற்சாலை கட்டுவதற்குத் தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆழியார்
ஆழியார்

By

Published : Apr 28, 2021, 12:56 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் என்ற கிராமத்தில் அரவிந்த கேசவ் என்பவர் தனக்குச் சொந்தமான 3.15 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

இந்த இடம் பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசனத் திட்டத்தின்கீழ் வரக்கூடிய வேளாண் நிலம் என்பதால் இந்த இடத்தில் தொழிற்சாலை கட்ட தடைவிதிக்க வேண்டும் என சமூக மீட்பு இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், வேளாண் நிலத்தில் கட்டுமானம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனவும், கட்டுமான பணிகள் கட்ட தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்குத் தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details