சென்னை கலங்கரை விளக்கம் அருகே உள்ள நொச்சி நகர் பகுதியில் காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை வழிமறித்து அதன் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காரில் கஞ்சா கடத்தியவர் கைது - 14 கிலோ கஞ்சா பறிமுதல் - Man arrested for smuggling cannabis in car
சென்னை : காரில் கஞ்சா கடத்திய நபரை கைது செய்து, அவரிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காரில் கஞ்சா கடத்திய நபர் கைது - 14கிலோ கஞ்சா பறிமுதல்
அந்த நபர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த காரை சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, கார் ஓட்டுநரான புவனேஷ்வரன்(36) என்பவரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த 8ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செயப்பட்ட புவனேஷ்வரனை மெரினா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.