தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட 3 வழக்குரைஞர்கள் இடைநீக்கம்! - தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்

சென்னை : பார் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு மாறாக குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட மூன்று வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்வதாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட 3 வழக்குரைஞர்கள் இடைநீக்கம்!
விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட 3 வழக்குரைஞர்கள் இடைநீக்கம்!

By

Published : Sep 2, 2020, 10:28 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலியில் இட விவகாரம் தொடர்பாக பார் கவுன்சிலில் புகார் கொடுத்தவரை கொலை செய்ததாக முத்துகிருஷ்ணன் (1798/2016) என்பவரை வழக்குரைஞர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதேபோல், கரூரில் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட சாதிக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வந்த பச்சையப்பன்(1682/2007) மற்றும் ஆர்.ராஜேந்திரன் (98/1988) என்ற இரண்டு வழக்குரைஞர்களையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று வழக்குரைஞர்களும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட தடை விதிக்கப்பட்டுள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details