தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்களுக்கு எதிராக லட்சுமி விலாஸ் வங்கி செயல்படுகிறதா? - special officer of managment

ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறாக செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க புதிய நிர்வாகிகள் நியமிக்க கோரிய மனு தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம், செபி ஆகியவைப் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்களுக்கெ மாறாக லட்சுமி விலாஸ் வங்கி செயல்படுகிறதா?
ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்களுக்கெ மாறாக லட்சுமி விலாஸ் வங்கி செயல்படுகிறதா?

By

Published : Sep 29, 2020, 4:58 PM IST

சென்னை: ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறாக செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க, புதிய நிர்வாகிகள் நியமிக்கக் கோரிய மனு தொடர்பாக மத்திய நிதியமைச்சகம், செபி ஆகியவைப் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியின் முன்னாள் அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், "தவறான நிர்வாகம் வங்கி விதிகள் மீறல் காரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி உண்மை தகவல்களை மறைத்து தவறான தகவல்களை பொதுமக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் தெரிவித்து வருகிறது. லட்சுமி விலாஸ் வங்கியின் தவறான அணுகுமுறையால், கடந்த 2017 ஆம் ஆண்டு 2.67 சதவீதமாக ஆக இருந்த வங்கியின் வாராக்கடன் கடந்த மார்ச் 25.39 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.

ரெளிகர் நிறுவனம், கடந்த 2016 - 2017 ஆம் ஆண்டுகளில் 750 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்த நிலையில் ஆர்.ஹெச்.சி. ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்துக்கு முறையாக எவ்வித ஆவணங்களும் இல்லாமல், முதலீட்டாளர்களின் ஒப்புதல் இல்லாமல், ரிசர்வ் வங்கி விதிகளைப் பின்பற்றாமல் 720 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த 2017ஆம் ஆண்டு 7 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய போது, 10 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளதாக வங்கி தரப்பில் தவறான தகவலைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி லட்சுமி விலாஸ் வங்கியில், 21 ஆயிரத்து 443 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இந்த முதலீடுகளுக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை என்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி போன்ற அமைப்புகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, வங்கியை நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று(செப்.29) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இதுகுறித்து எட்டு வாரங்களுக்குள் மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details