தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புஷ்கர விழாவை முன்னிட்டு ரத யாத்திரை தொடக்கம்! - நாகப்பட்டினம்

நாகை: திருவாடுதுறையிலிருந்து அம்மன் ரதயாத்திரை மதுரையில் நடைபெற உள்ள புஷ்கர விழாவை முன்னிட்டு புறப்பட்டது.

rathayathirai

By

Published : Jun 10, 2019, 8:44 AM IST

மதுரையில் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை வைகை புஷ்கர விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அகில பாரத சந்நியாசிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக மதுரை நோக்கிச் செல்லும் ரத யாத்திரை திருவாடுதுறை ஆதீனத்தில் இருந்து புறப்பட்டது.

இந்த ரத யாத்திரை 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்வைகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கிவைத்தார். நதிகள், விவசாயம் காக்கவும், மழை வேண்டியும் இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தனர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரதயாத்திரை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details