மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சடைச்சிபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (50) இவருடைய மகன் தவமணி (20). இருவரும் மினி சரக்கு வேனில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்பவர்கள், இன்று காலை திருமங்கலம் பகுதியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராயபாளையம் விலக்கு அருகே சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த மினி சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.