இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும்.
செப். 21 முதல் இறுதி பருவத் தேர்வுகள் - சென்னை பல்கலை. அறிவிப்பு - இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கும்
சென்னை : இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்குமென சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழக்கமான நேரடி முறையில் பருவத் தேர்வுகள் நடைபெறும். அதே நேரத்தில் கரோனா வைரஸால்(தீநுண்மி) பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்ததால் அவர்கள் ஆன்லைன் வழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோன்று வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்படும். அக்டோபர் 14ஆம் தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.