தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுவிற்காக கரோனோவுடன் விளையாடும் மதுப்பிரியர்கள்! - Tasmac

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் முகக் கவசம் அணியாமல் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The People not following social distance
The People not following social distance

By

Published : May 1, 2021, 6:53 AM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், மே 2ஆம் தேதி 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், நேற்று (ஏப். 30) மதுபாட்டில்கள் வாங்குவதற்கு மதுபானக் கடைக்கு வந்த மதுப்பிரியர்கள், தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியமாலும் அரசின் விதிமுறைகளை மீறி மதுவாங்கிச் செல்ல குவிந்ததால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், தகுந்த இடைவெளி பின்பற்றாமல் மதுபாட்டில் வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள், விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details