பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அல்லிநகரம் ஊராட்சியில் உள்ளது மேல உசேன் நகரம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ். அவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், தங்க லட்சுமி என்ற மனைவியும் உள்ளனர். இவரது வீட்டை ஒட்டி போர்வெல் கிணறு அமைக்கப்பட்டு சுவர் எழுபப்பட்டது. இதனிடையே பூங்கொடி நீதிமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்கு தொடர 2017ஆம் ஆண்டு பூங்கொடிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு அல்லிநகரம் ஊராட்சி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று இடத்தகராறு காரணமாக பூங்கொடியும், தங்க லட்சுமியும் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தீக்குளித்த இருவரில் பூங்கொடி உயிரிழந்தார். தங்க லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.