தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெசவாளர்களுக்கு 1.5 டன் அரிசியை கரோனா நிவரணமாக வழங்கிய காஞ்சிபுரம் எம்எல்ஏ - Kanchipuram MLA

காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையம் பகுதியில் கரோனா நிவாரணமாக ஏழை எளிய நெசவாளர்களுக்கு 1.5 டன் அரிசியை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் இன்று வழங்கினார்.

நெசவாளர்களுக்கு 1.5 டன் அரிசி
நெசவாளர்களுக்கு 1.5 டன் அரிசி

By

Published : Jun 17, 2021, 1:54 AM IST

கரோனா முழு ஊரடங்கினால் நெசவாளர்கள் மிகுந்த பகுதியான காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியிலுள்ள சேர்மன் சாமிநாதன் முதலியார் தெரு, அறிஞர் அண்ணா கிளை நூலகம் அருகில் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட அப்பகுதி ஏழை எளிய நெசவாளர்கள், பொது மக்களுக்கு மாவட்ட அரசு ஒப்பந்ததாரர் கே. சுடர்மணி தினமும் 300 நபர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கி வந்தார்.

இந்நிலையில் இன்று கரோனா முழு ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய நெசவாளார்கள் மற்றும் பொது மக்கள் என 300 நபர்களுக்கு 5 கிலோ வீதம் 1.5 டன் அரிசியை கரோனா நிவாரணமாக திமுக மாநில மாணவரணி செயலாளரும்,
காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.எம்.பி எழிலரசன் மாவட்ட அரசு ஒப்பந்ததாரர் கே சுடர்மணி ஏற்பாட்டின் பேரில் வழங்கினார்.

இதற்கு அப்பகுதி ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சிவிஎம் அ சேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details